மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கான பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவர், பாஜக கட்சியின் முன்னோடி தீன் தயாள் உபாத்தியாயா ஆகியோர் குறித்த பாடங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாணவர்களுக்கு சமூக விழுமியங்கள் உயர் பண்புகள் ஆகியவற்றை போதிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாக மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் சட்ட மைதை அம்பேத்கர் குறித்த பாடவும் இடம்பெறும் என கூறியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றால் தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய பிரதேச கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சாரங் அவரது வாழ்க்கையையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என ஆளும் பாஜக அரசு காங்கிரஸ் கிண்டலாக விமர்சித்துள்ளது.