போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய காவலர் ஒருவர், “ நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மான்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலால் 18 வயது நிரம்பிய குல்ஃப்ராஸ் அகமது என்பவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியை பின்பற்ற சொன்ன காவல் துறை மீது தாக்குதல்