உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு தலைமை காவலர் சத்ய பிரகாஷ் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில் தற்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி யோகி குற்றமற்றவர் என அறிக்கை தாக்கல் செய்தது. கீழமை நீதிமன்றமும் சிபிசிஐடியின் அறிக்கையை ஏற்று கொண்டு யோகி குற்றம் செய்யவில்லை என அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் சிறப்பு நீதிமன்றம் ஆதித்யநாத்துக்கு எதிரான கொலை வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதேபோல் பல குற்றவழக்குகள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகிக்கு எதிராக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.