கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸ் - மதச்சாரபற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. ராஜினாமா கடிதம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, "கர்நாடகா முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். பெரும்பான்மை இல்லாததால் அவர் நாளைக்கு ராஜினாமா செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.