ETV Bharat / bharat

'அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு முன் துரித நடவடிக்கை தேவை' - போதுமான அளவு வீரர்களை இருப்பு வைத்துக்கொள்ள கோரிக்கை

டெல்லி: நீண்ட காலமாக அருணாச்சலப் பிரதேசத்தின் மீது கண் வைத்திருக்கும் சீனா, லடாக் பகுதிகளைத் தொடர்ந்து அங்கும் விதிகளை மீறி ஏதேனும் செய்வதற்கு முன்னதாக விரைவான மற்றும் வலுவான போர்த் திட்டத்தை இந்தியா தயாரிப்பது நல்லது என மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்புத் தொகுப்பு இதோ...

With no de-escalatory disengagement, China may be eyeing Arunachal Pradesh for next move

author img

By

Published : Jul 5, 2020, 11:29 AM IST

இந்திய-சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்துவருகிறது. இரு நாடுகளும் மாறிமாறி பரஸ்பரம் குற்றஞ்சாட்டிவருகின்றன. இச்சூழலில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்குச் சென்று கள நிலவரங்களை ஆய்வுசெய்தார்.

பின்னர், எல்லையிலுள்ள வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ”சீனாவை மறைமுகமாகத் தாக்கிய அவர், எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்யும் காலம் எல்லாம் தற்போது மலையேறிப்போகிவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்பு சக்திகள் தோல்வியே சந்தித்துள்ளன என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. லே, லடாக் தொடங்கி சியாச்சின், கார்கில், கல்வான் என எல்லையின் அனைத்துப் பகுதிகளிலும் இந்திய வீரர்களின் வீரம் பறைசாற்றப்பட்டுள்ளது” என்றார்.

இதிலிருந்து எல்லைப் பதற்றம் குறித்து பிரதமர் ஒரு வலுவான நிலைப்பாட்டை வீரர்களுக்கு அளிக்க நினைத்துள்ளது புலப்படுகிறது. இருந்தபோதிலும், தற்போது பலர் மத்தியில் ஒரு எண்ணம் எழுந்திருக்கிறது. நீண்ட நாள்களாக இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்வசமாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.

இந்திய-சீன எல்லைப் பகுதியிலுள்ள லடாக் முழுவதும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி உள்ளது போல, திபெத்துக்கும் வடகிழக்கு இந்தியாவிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் மெக்மோகன் எல்லைக்கோடு உள்ளது. இந்தக் கோடு 1914ஆம் ஆண்டு ஆங்கிலேய புவியியலாளரான ஹென்றி மெக்மோகனால் வரையறுக்கப்பட்டது. இதனை இந்தியாவும் திபெத்தும் ஒப்புக்கொண்டன. ஆயினும், சீனா இந்த மெக்மோகன் எல்லைக்கோடை ஏற்க மறுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் 65 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான நிலத்தை உரிமை கோருகிறது.

1959ஆம் ஆண்டு சீனப் பிரதமர் சௌஎன் லாய், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், சீனாவின் திபெத்திய பிராந்தியத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புக் கொள்கையின் ஒரு தயாரிப்பே மெக்மோகன் எல்லைக்கோடு எனவும், எல்லைக் கோடுகளை முறையாக வரையறுக்க எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்திய-சீன எல்லையாக உள்ள திபெத் ஒரு இறையாண்மை கொண்ட நாடு அல்ல எனவும் விமர்சித்திருந்தார்.

தற்போது நிலவிவரும் போர்ப் பதற்றம் தொடர்ந்தால், நாம் லடாக்கில் சந்தித்தது போன்ற தாக்குதல்களை அருணாச்சலப் பிரதேசத்திலும் சந்திக்கும் நிலை ஏற்படும். முன்னாதாக, லடாக்கின் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் படை வீரர்களையும், போர் விமானங்களையும் குவித்துவருகிறது. அதுமட்டுமின்றி மெக்மோகன் எல்லைக்கோடு அருகே சீனா தன்னுடைய சாலைகளை நீண்ட நாள்களுக்கு முன்பே தயார் நிலையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை ஒருபுறமிருக்க நம் அண்டை நாடுகளுடனான நமது நட்பு கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான், சீனா, நேபாளம் என சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடனும் எல்லைப் பதற்றங்கள் அதிகரித்துவருகிறது. நமது நாட்டில் 13 மாவட்டங்கள் பூட்டான், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்துள்ளது.

தற்போதைய கரோனா சூழலில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ராணுவ வீரர்களை அருணாச்சலப் பிரதேசத்தில் குவிப்பதற்கு அதிகளவு பொருளாதாரம் தேவைப்படும். மேலும், நீண்ட காலத்திற்கு ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவது, எப்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது போன்றவை போர் குறித்து சோர்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும்.

ஆகையால், சீன ராணுவத்தின் நகர்வை முன்கூட்டியே அகற்றுவதற்கான ஒரு போர்த் திட்டத்தை இந்தியா தயாரிப்பது நல்லது. போதுமான அளவு வீரர்களை இருப்பு வைத்துக்கொள்வது தற்போதைக்கு நிலைமையைச் சீராக்க உதவும்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.