மேற்கு வங்கத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள இளம் மருத்துவர்கள் அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவர்களின் பிரதிநிதிகளை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.