கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில மாநிலங்களில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் சில மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவந்தது.
குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலராக இருந்த விவேக் குமார் அதிரடியாக சுற்றுச்சூழல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், போக்குவரத்துத் துறை செயலராக இருந்த நாராயண் ஸ்வரூப் நிகாம் தற்போது சுகாதாரத் துறைக்குச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேற்கு வங்க அரசு மே 11ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நெருக்கடியான நிலையில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், இந்த பணியிட மாற்றம் என்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2063 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகிறோம் - மம்தா தாக்கு