ETV Bharat / bharat

மம்தாவை ட்விட்டரில் தொடர்ச்சியாக தாக்கும் ஜெக்தீப் தங்கர்!

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ட்விட்டரில் தாக்கி ட்வீட் செய்து வருகிறார்.

Mamata Banerjee  WB Governor Jagdeep Dhankhar  WB Governor Jagdeep Dhankhar tweets  மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர்  மம்தா பானர்ஜி  மம்தா ஜெக்தீப் பிரச்னை  குடிபெயர்ந்த தொழிலாளர்கள்
மம்தாவை ட்விட்டரில் தொடர்ச்சியாக தாக்கும் ஜெக்தீப் தங்கர்
author img

By

Published : May 29, 2020, 11:33 PM IST

மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கி ட்வீட் செய்துள்ளார். புர்ட்வான் மாவட்டத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது அவர்களின் விருப்பம்.

அவ்வாறு திரும்புபவர்களை கோவிட்-19 தொற்று பரப்புவர்கள் என்று முத்திரை குத்துவது பொருத்தமற்ற, வருத்தமளிக்கக் கூடிய செயல். ஊர் திரும்பியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மேற்குவங்கத்தின் சொத்து. அரசு காட்டியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். இருந்தபோதிலும், மனிதாபிமானத்துடன் செயல்படுங்கள் மம்தா.

இந்த நெருக்கடி, துன்ப காலத்தில் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் இருக்கவேண்டும் என, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் உணர்வுகளை மதியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் ஜெக்தீப் தங்கர், கடந்த சில மாதங்களாகவே மம்தாவை தாக்கி ட்வீட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதைுயும் படிங்க: இந்தியாவின் அரிசிக் கிண்ணமாக தெலங்கானாவை மாற்றும் பணியில் இறங்கிய கேசிஆர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.