ETV Bharat / bharat

வங்கியிலிருந்து ரூ.20 லட்சத்தை திருடிய 10 வயது சிறுவன்: காணொலி வைரல் - Watch: 10-year-old boy steals Rs 20 lakh from bank in Haryana

சண்டிகர்: ஹரியானாவில் பத்து வயது சிறுவன் வங்கியில் நுழைந்து 20 லட்சம் ரூபாயை திருடிய காணொலி வைரலாகிவருகிறது.

அலேக்காக வங்கியிலிருந்து ரூ. 20 லட்சத்தை திருடிய 10வயது சிறுவன்...!

author img

By

Published : Sep 30, 2020, 5:16 AM IST

ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நேற்று (செப். 29) மதியம் வழக்கம்போல் பணத்தை எண்ணியுள்ளனர். அப்போது வங்கியின் இருப்புத் தொகையிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் குறைந்திருப்பதை உணர்ந்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பணம் குறித்து விசாரிப்பதற்காக சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

சரியாக மதியம் ஒரு மணிக்கு வங்கியில் உள்ளே நுழைந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன், பக்கத்தில் இருந்தவரின் ஆலோசனைப்படி காசாளரின் அறையை நோட்டமிட்டு, பின்னர் காசாளர் வெளியே சென்றதைப் பார்த்துவிட்டு, அறைக்கு உள்ளே நுழைந்து, அங்கிருந்து 20 லட்சம் ரூபாயை தனது பையில் தூக்கிப் போட்டுக் கொண்டு வெளியே வந்துவிடுகிறான்.

இதனையடுத்து இது குறித்து வங்கி ஊழியர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். சிசிடிவியைக் கைப்பற்றிய காவல் துறையினர் சிறுவன் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது வங்கியிலிருந்து ரூ.20 லட்சத்தை திருடிய 10 வயது சிறுவனின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க....இருசக்கர வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு : உறவினர்கள் தர்ணா போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.