ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசி ஒருவர் உயிரிழப்பு! - பிஜப்பூர் மாவட்டம்

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார்.

Villager dies, another hurt in crossfire between Maoists, security forces
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசி ஒருவர் உயிரிழப்பு!
author img

By

Published : Apr 18, 2020, 1:36 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் புஸ்குடியைச் சேர்ந்த துபா கன்ஹையா என்றும் மற்றொருவர் யலாம் தர்மையா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் கம்லோசன் காஷ்யப் கூறுகையில், “பிஜப்பூர் மாவட்டத்தை அடுத்துள்ளது புஸ்குடி கிராமம். இது மோடக்பால் காவல் நிலையத்தின் மேற்பார்வைக்குள் இருக்கும் கிராமமாகும். அக்கிராமத்தின் அருகே நேற்று (ஏப்ரல் 17) அதிகாலை 4 மணியளவில் சி.ஆர்.பி.எப் 229ஆவது பட்டாலியன் குழு நடத்திய சோதனை அணிவகுப்பை நடத்தினர்.

முர்கினாரை கடந்து இருந்து 4 கி.மீ தூரத்தில் காட்டில் முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்துள்ளனர். அவர்கள் யாரென அறிய அவர்களது ​​அடையாளத்தை கூறுமாறுக் கோரி கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் பாதுகாப்புப் படை குழுவினர் அறிவிப்புக்கு பதில் அளிக்காமல் இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, பாதுகாப்புப் படை குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தி முடித்த பின்னர், அந்த குறிப்பிட்ட இடத்தை ​​பாதுகாப்புப் படையினர் அடைந்தபோது காயங்களுடன் இருவரைக் கண்டுள்ளனர். பின்னர், அவர்களை மீட்டு பிஜப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே, சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்” என அவர் தெரிவித்தார்.

ஆனால் சந்தேகத்திற்கிடமான ஆள்நடமாட்டம் தென்பட்டதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறியதை உள்ளூர்வாசிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த மற்றொரு கிராமவாசி கூறுகையில், "நானும் மற்ற மூன்று கிராமவாசிகளும் அதிகாலை 3 மணியளவில் எங்கள் கிராமத்தை ஒட்டிய காட்டுக்கு கால்நடைகளிடமிருந்து மஹுவா பூக்களைப் பாதுகாக்க வேலிகளை அமைக்க சென்றிருந்தோம். அந்த வேலையை முடித்துவிட்டு நாங்கள் கிராமத்திற்குத் திரும்பி வரும் வழியில் பறவைகளை வேட்டையாடியபோது (வேட்டையாடுதல் பழங்குடியினரின் மரபுரிமை) திடீரென எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" ஒரு கிராமவாசி.

Villager dies, another hurt in crossfire between Maoists, security forces
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசி ஒருவர் உயிரிழப்பு!

நானும் மற்றொரு கிராமவாசியும் தப்பித்துவிட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களுடம் இருந்த ​ இருவர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் நக்சல்கள் யாரும் இல்லை. பாதுகாப்புப் படையினர் எங்கள் மீது வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தினர்.”என அவர் கூறினார்.

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் அரசின் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக கடந்த வாரம் மாவோயிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை - கேரள நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.