ETV Bharat / bharat

கவிஞர் வரவர ராவ்: நரம்பியல் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றம்! - பீமா கோரிகன் வழக்கு

மும்பை: நரம்பியல் சிகிச்சைக்காக கவிஞர் வரவர ராவ் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையிலிருந்து இன்று அதிகாலை நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Varavara Rao shifted to Nanavati  neurological treatment  St George Hospital  Elgar Parishad case  வரவர ராவ்  வரவர ராவ் மரு்ததுவமனையில் அனுமதி  வரவர ராவ் மருத்துவமனை மாற்றம்  மும்பை  எல்கர் பரிஷாத்  பீமா கோரிகன் வழக்கு  எல்கர் பரிஷாத் வழக்கு
வரவர ராவ்:நரம்பியல், சிறுநீரக சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றம்!
author img

By

Published : Jul 19, 2020, 10:21 AM IST

எல்கர் பரிஷத் வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள முக்கியச் சமூகச் செயற்பாட்டாளர்கள் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை முதலில் புனே காவலர்கள் விசாரித்து வந்தநிலையில், சமீபத்தில் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெலங்கானா கவிஞர் வரவர ராவ்(80), மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 22 மாதங்களாகச் சிறையில் இருக்கும் அவர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தனது மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணை கோரியிருந்தார்.

அவருக்குப் பிணை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுவந்த நிலையில், அவருக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் வரத் தொடங்கின. சிறையில் சக தோழர்களிடம், அவர் மனநலம் சரியில்லாதவர்போல் பேசிவந்துள்ளார். தனது குடும்பம் தனக்காகச் சிறைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது போலவும் தனது தாய், தந்தையர் மரணம் குறித்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்ச்சியாகப் பேசிவந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வரவர ராவின் குடும்பத்தினர், உடனடியாக அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் ராவுக்குப் பிணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினர். இச்சூழலில் சில நாள்களுக்கு முன்பு அவர், ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனெவே அவருக்கு நரம்பியல் பாதிப்பு இருந்த நிலையில், அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஜெ.ஜெ. மருத்துவமனையில் அவருக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த பின்பு, அவர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இன்று அதிகாலை சிறுநீரக, நரம்பியல் சிகிச்சைக்காக அவர் நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.