இது தொடர்பாக உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜின் மனைவி, மகன், மருமகள் உள்பட அவரது குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறையினரால் 41 நபர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் சத்பால் மஹாராஜின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் உள்பட 17 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களும் அடங்குவர். மேலும், ஹரிஷ் ராவத் தலைமையிலான ஆட்சியின் போது அமைச்சராக இருந்த அம்ரிதா ராவத்துக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று 17 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 749ஆக உயர்ந்துள்ளது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.