ETV Bharat / bharat

எஸ்.ஐ.டி. விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளித்த உ.பி. அரசு! - சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி)

லக்னோ: ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) மேற்கொண்டுவரும் விசாரணையின் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஐ.டி விசாரணை அறிக்கையை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் அளித்த உ.பி., அரசு!

author img

By

Published : Oct 7, 2020, 3:20 PM IST

இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில உள் துறையை கவனித்துவரும் கூடுதல் தலைமைச் செயலர் அவனிஷ் கே அவஸ்தி கூறுகையில், "ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) ஒன்று அமைக்கப்பட்டது.

உயிரிழந்த பட்டியலின பெண்ணின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை கடந்த ஞாயிறன்று (அக். 04) எஸ்.ஐ.டி. பெற்றது.

அதனடிப்படையில் அளித்த முதல்கட்ட அறிக்கையின்பேரில், கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றச்சாட்டில் ஹத்ராஸ் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் உள்ளிட்ட சில அலுவலர்களை மாநில அரசு இடைநீக்கம் செய்தது.

எஸ்.ஐ.டி. விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பாலிகிராஃப், குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரிடம் போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனைகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டன.

இதற்கிடையில், இந்த வழக்குத் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தவும் உ.பி. அரசு பரிந்துரைத்தது.

இந்நிலையில், எஸ்.ஐ.டி. விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை இன்று ஒப்படைப்பதாக இருந்த சூழலில் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மேலும் விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டு, அறிக்கையைத் தாக்கல்செய்ய கூடுதலாக 10 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.