ETV Bharat / bharat

அமெரிக்க அதிபர் இன்று இந்தியா வருகை - donald trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

donald
donald
author img

By

Published : Feb 24, 2020, 7:42 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரின் மனைவி மெலனியாவுடன் வாஷிங்டனிலிருந்து நேற்று தனி விமானம் மூலம் புறப்பட்ட ட்ரம்ப், குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று நண்பகல் வந்திறங்குகிறார்.

விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்பை வரவேற்கிறார். இந்தியா வரும் ட்ரம்ப்பிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்று 1.25 லட்சம் மக்களின் முன்னிலையில், ட்ரம்ப் தோன்றி உரை நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து பிற்பகல் ஆக்ராவிலுள்ள தாஜ் மஹாலை ட்ரம்ப் குடும்பத்தினர் பார்வையிடுகின்றனர்.

ட்ரம்பின் வருகை காரணமாக அகமதாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 11 ஆயிரம் காவல் துறையினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு இன்று வருவதையொட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இந்தியாவில் என் சிறந்த நண்பர்களுடன் இருக்கப்போவதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' எனக் கூறி உள்ளார்.

இதேபோன்று பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க இந்தியா மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது. அகமதாபாத்தில் நடக்கப்போகிற வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வுடன் அவர் நம்மோடு இருப்பது நமக்கு கவுரவம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ட்ரம்ப்பின் இந்திய பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.