ETV Bharat / bharat

'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானத்தின் தகுதிச் சான்றிதழை ஆய்வு செய்ய அமெரிக்கா உத்தரவு!

வாஷிங்டன் : ஐந்து மாதங்களில் இரண்டு முறை கோர விபத்தை ஏற்படுத்திய 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானத்தின் தகுதிச் சான்றிதழை பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Mar 20, 2019, 9:28 AM IST

போயிங் 737 மேஸ்" ரக விமானத்தின் தகுதி சான்றிதழை ஆய்வு செய்யும் அமெரிக்கா உத்தரவு

மார்ச் 10ஆம் தேதி ஆப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான, போயிங் 737 மேக்ஸ் ரக பயணிகள் விமானத்தில் இருந்த 157 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 190 பேர் பலியாகினர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையே, ஐந்து மாதத்திற்குள் மற்றொரு போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் விபத்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானதோடு பீதியையும் ஏற்படுத்தியது. அதிலும், குறிப்பாக 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பல நாடுகளுள் பாதுகாப்புக் கருதி இந்த ரக விமான சேவையை ரத்து செய்தது. மேலும், எத்தியோப்பியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில்,பாரிசில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டி மற்றும் விமானி அறையின் குரல் பதிவு தற்போது எத்தியோப்பியா தலைநகர் அடில் அபாபாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு அந்நாட்டு போக்குவரத்துத் துறை செயலர் எலைன் சாவ் எழுதியுள்ள கடிதத்தில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் தகுதிச் சான்றிதழை ஆய்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என பெடரல் ஏவியேசன் நிர்வாகத்தின் ஆய்வுக்கு பாதுகாப்புப் படையினர் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.