மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருகின்ற 12ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். அன்றைய தினம் வாஷிங்டன் சென்றடையும் அவர், அடுத்த நாள் அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருதரப்பையும் சேர்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து 14ஆம் தேதி வர்த்தகம் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டத்தில் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார். இதில் முக்கிய தொழிலதிபர்கள், வணிக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை உயர்த்துவதற்காக அமெரிக்கா விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யவுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதம் தெரிவித்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்