டெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ நிலைத்தன்மை உச்சி மாநாட்டில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "கார்பன் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்திய ரயில்வே அடுத்த 10 ஆண்டுகளில் 100 விழுக்காடு மின்மயமாக்கப்படும். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி ரயில்வே இயக்கப்படும்.
மின்மயமாக்கப்பட்ட மிகப் பெரிய ரயில்வே என்ற பெறுமையை இந்தியா பெறும். இதனால் பெறுமளவு கார்பன் பயன்பாடு குறையும். டெல்லிக்கு வரப்படும் பெரும்பாலான ரயில்கள் டீசலை பயன்படுத்துகிறது. 2018-19ஆம் ஆண்டு மட்டும் இந்திய ரயில்வே 20.44 கோடி யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளது. இதில், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் பெரிய பங்கை ஆற்றவுள்ளது" என்றார்.