கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில மக்களுக்கு பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு 70 ஆயிரத்து 725 டன் உணவு தானியங்களை ஒதுக்கியது. ஆனால் 668 டன் தானியங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார் .
இதையடுத்து, அமரீந்தர் சிங் அரசு மெத்தனம் காட்டாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உணவு தானியங்களை வழங்குமாறு அவர் தனது ட்விட்டர் பதவில் கேட்டுகொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய உணவு தானியங்களை வழங்கவில்லை என ஷிரோமனி அகாலி தள் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவதிபட்டுவரும் மக்களை கஷ்டப்படுத்தாமல் உடனடியாக அவர்களுக்கு தானியங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுகொண்டார். இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அமரீந்தர் சிங் மறுத்துள்ளார்.
மே 1ஆம் தேதி மத்திய அரசு 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் பருப்புகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் பருப்புகளை மட்டுமே வழங்கியதால் மாநில அரசிடம் இருந்த கோதுமைகளையும் பருப்புகளையும் மே 1ஆம் தேதியில் இருந்து 18 மாவட்டங்களில் விநியோகம் செய்துவருவதாக தெளிவு படுத்தினார்.
மேலும் 15 லட்சம் மக்களுக்கு தலா 10 கிலோ கோதுமை, இரண்டு கிலோ பருப்பு, இரண்டு கிலோ சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வழங்குவதற்கான நிதியை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து ஒதிக்கியுள்ளது என தெரிவித்தார்.
கடந்தாண்டு விளைச்சல் செய்யப்பட்ட 73 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 100 லட்சம் மெட்ரிக் டன் அரிசி குடோன்களில் இருப்பில் உள்ளது. மேலும் 135 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை சேகரிக்கப்படவுள்ளது. அதனால், தானியங்களை அழுகிபோகாமல் இருக்க போதுமான வசதிகளை செய்துதர வேண்டுமென ராம்விலாஸ் பஸ்வானிடம் அமரீந்தர் சிங் கேட்டுகொண்டார்.
தனது கட்சி நலனுக்கு முக்கியத்துவும் கொடுத்து மத்திய அரசையும், பஞ்சாப் மக்களையும் தவறாக வழிநடத்துகிறார் என ஹர்சிம்ரத் கவுரை அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கிற்கு பிறகு எவ்வாறு கையாள போறீங்க.... பஞ்சாப் முதலமைச்சர் கடிதம்!