"சி.ஆர்.பி.எஃப். 110 பட்டாலியன் ஜம்மு - காஷ்மீர் காவலர்களுடன் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டது. அப்போது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் (12:50 மணி) சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 5 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயமடைந்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்" என்று சி.ஆர்.பி.எஃப். தெரிவித்துள்ளது.
சி.ஆர்.பி.எஃப். வீரர்களில் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர், காயமடைந்த மூவரும் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பம்பூர் நகருக்கு அருகிலுள்ள காண்டிசல் பாலம் அருகே இந்த தாக்குதல் நடந்ததாகவும், பைக்கில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குப் பின்னர், முழுப் பகுதியும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.
சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்தியதாக காஷ்மீர் மண்டல காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
"சி.ஆர்.பி.எஃப். பணியாளர்களைத் தாக்கிய இரண்டு எல்இடி பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பயங்கரவாதி, சைபுல்லா, பாகிஸ்தானி. இவர் இதற்கு முன்பு சி.ஆர்.பி.எஃப். பணியாளர்களை இரண்டு முறை தாக்கியுள்ளார், மற்றவர் உள்ளூர் பயங்கரவாதி" என்றும் அவர் கூறினார்.
லெத்போரா இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இன்று பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலுக்குப் பின்னர், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவிலிருந்து தெற்கு காஷ்மீரின் காசிகுண்டில் உள்ள ஜவாஹிர் சுரங்கப்பாதை வரை ராணுவம், காவல் துறை மற்றும் துணை ராணுவப் படைகளை அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.