சர்வதேச யோகா தினம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மனக்கட்டுப்பாடு, ஒருமைப்பாடு, மன அமைதியைப் பெற தினமும் யோகா உதவுகிறது. மக்களும் தற்போது யோகா செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையைில், யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை கடற்கரை சாலையில் அமர்ந்து ஆர்வத்துடன் யோகா செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் யோகாசனம் செய்தனர். புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின்குமார், சுகாதாரத் துறை செயலர் ராமன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.