புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இவர்கள் கடந்த சில தினங்களாக தாங்கள் பயன்படுத்திய சீருடை, காலணிகள் அனைத்தும் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் உள்ள மரத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
அதனைக் கடந்துதான் காவலர்கள், பொதுமக்கள் செல்லவேண்டிய நிலை உள்ளதால் இது அனைவருக்கும் முகச் சுளிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : குடிக்க பணம் கேட்ட மகன் - அடித்துக் கொன்ற தாய்!