நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழசக்கர நல்லூர் கடைவீதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு காரில் 10 அட்டைப் பெட்டிகளில் 180 மிலி குவாட்டர் மது பாட்டில்கள் 480 எண்ணிக்கைியல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் கார்களில் இருந்த ரூபாய் 40,000 மதிப்புடைய மது பாட்டில்கள், 24,000 மதிப்புடைய சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லட்சம் மதிப்புடைய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
கார்களை ஓட்டி வந்த மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜி (47) , சீர்காழி கொண்டத்துறையைச் சேர்ந்த தினேஷ் குமார் (22) ஆகிய இருவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.