திரிபுரா மாநிலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால், உன்னகோட்டி பகுதியில் அமைந்திருக்கும் காக்தி, ஜுரி ஆகிய இரு நதி நீர் முழு கொள்ளளவை எட்டியதால் அணை உடையும் ஆபத்தை கருதி அரசு உத்தரவின் பேரில் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பாதிப்புக்குள்ளாகியது.
அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியதால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவியால் அம்மக்கள் மீட்கப்பட்டு, அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வட திரிபுராவில் மட்டும் மரங்கள் விழுந்தும், நீரில் மூழ்கியும் மொத்தமாக 1039 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இன்னும் மீட்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதற்காக 40 படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்புக் களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் தற்போது வரை எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.