ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசம் செல்லும் மோடி; உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு - மோடி உத்தர பிரதேச பயணம்

லக்னோ: நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரபிரேதம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு பிரதமர் மோடி பயனம் மேற்கொள்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Modi
Modi
author img

By

Published : Feb 28, 2020, 6:50 PM IST

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைக்க உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு, பரேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மோடி 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கவுள்ளார்.

அதன் பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித்தொகைத் திட்டத்தின் முதலாமாண்டு விழா சித்தரகூட் பகுதியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மோடி விவசாயிகளுக்கான நல உதவித்திட்டங்களை வழங்கவுள்ளார்.

பிரமரின் வருகையை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உச்சபட்ச கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி வன்முறை பாதுகாப்புக் குறித்து கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

எனவே பிரதமரின் வருகைக்காக ஆறு ஐ.பி.எஸ். அதிகாரிகள், 12 ஏ.எஸ்.பிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் துணை ராணுவப்படையினர், சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கான்வாயை நிறுத்தி கீழே இறங்கிய தெலங்கானா முதலமைச்சர் - நெகிழ்ந்த மாற்றுத் திறனாளி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.