காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறைகள், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் பிரிவினைவாதிகள்-பாதுகாப்புப் படையினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சிக்கி ஒரு பிரிவினைவாதி உயிரிழந்துள்ளார். ஆயுதங்கள் ஏந்திய இரண்டு பிரிவினைவாதிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முன்னதாக, பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெற்கு காஷ்மீரில் அதிகமுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திடமிருந்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில், பிரிவினைவாதிகள் நிலைகுலைந்தனர். பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளைத் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாநிலங்கள் வாரியாக கரோனா பாதிப்பு விவரம்