தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் விலங்கியல் பூங்காவில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியானர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.