சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நாட்டிற்கும் உலக சுகாதார அமைப்பு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியங்கள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடும் வகையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், எல்லைப்பகுதிகளில் வெளிநாட்டவர்கள் நுழைய 30 நாள் தடையை விதித்தார். பிரான்ஸ் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், வர்த்தகத்துறையில் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க வணிக நிறுவனங்களை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் பேசிய அவர், பொருளாதார சரிவு குறித்து அஞ்ச வேண்டாம் என்றும், சிறிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடை வாடகை, கட்டணங்கள் ஆகியவற்றிற்கு அரசு உத்தரவாதம் உண்டு எனவும் உறுதியளித்தார்.
நாட்டின் சுகாதாரக் குழு குழந்தைகளின் பராமரிப்பை கவனித்துக் கொள்ளும். அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்ச சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பயணத்திற்கு அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளும் எனவும், அதற்கான வாகன செலவை அரசு செலுத்தும் எனவும் தெரிவித்தார்.
பிரான்ஸில் கெடுபிடி:
மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அவர்கள் வெளியே வந்தால், ஏன் வந்தார்கள் என உரிய காரணத்தோடு ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
இதையும் படிங்க: 'கரோனாவால் ஒரு மாதம் போராட்டங்கள் ரத்து'