திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் இன்று முதல்முறையாக உரையாற்றினார். அப்போது, மத்திய நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் எனவும், அவர் எங்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்றார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என சாடியுள்ளார்.
மேலும், மத்திய நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளாக வேதனை தெரிவித்தார்.