தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், பரி ரக்சனா சமிதி என்ற அமைப்பின் தலைவர் கார்னி ஸ்ரீசைலம் என்பவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிட பள்ளிகளின் விதிமீறல்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் மன்றத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், கார்னி ஸ்ரீசைலத்தை கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.