ETV Bharat / bharat

'நான் ஏன் சுஷாந்த் சிங் படுகொலை செய்யப்பட்டதாக நினைக்கிறேன்?' - சுப்பிரமணியன் சுவாமி!

author img

By

Published : Jul 30, 2020, 9:08 PM IST

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறி, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 26 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

sushant-singh-rajput-was-murdered-subramanian-swamy-shares-points-to-support-his-claim

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையிலுள்ள அவரது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மும்பை காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் பலரிடம் வாக்குமூலம் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகிப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், 'நான் ஏன் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்' எனக் குறிப்பிட்டு 26 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

Why I think Sushanth Singh Rajput was murdered pic.twitter.com/GROSgMYYwE

— Subramanian Swamy (@Swamy39) July 30, 2020 ">

அதில், 'சுஷாந்தின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்கள், தூக்கிட்டுக் கொண்டவை போல காட்சியளிக்கவில்லை. மாறாக அது படுகொலை செய்யப்பட்டிருந்ததற்கான அடையாளமாகத் தெரிகிறது.

ஆவணங்களின் படி, ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டால், தனது காலடியில் உள்ள மேஜைகளை விலக்கி விடுவார். ஆனால், அது இங்கு நிகழவில்லை.

மேலும், சுஷாந்தின் உடலில் அடிபட்ட காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன' என்பது உள்ளிட்ட கூற்றுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையிலுள்ள அவரது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மும்பை காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் பலரிடம் வாக்குமூலம் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகிப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், 'நான் ஏன் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்' எனக் குறிப்பிட்டு 26 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

அதில், 'சுஷாந்தின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்கள், தூக்கிட்டுக் கொண்டவை போல காட்சியளிக்கவில்லை. மாறாக அது படுகொலை செய்யப்பட்டிருந்ததற்கான அடையாளமாகத் தெரிகிறது.

ஆவணங்களின் படி, ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டால், தனது காலடியில் உள்ள மேஜைகளை விலக்கி விடுவார். ஆனால், அது இங்கு நிகழவில்லை.

மேலும், சுஷாந்தின் உடலில் அடிபட்ட காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன' என்பது உள்ளிட்ட கூற்றுகளைத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.