ETV Bharat / bharat

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கலாமா வேணாமா - உச்சநீதிமன்றம் பதில் - தெலங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை

ஹைதராபாத்: தெலங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்த உயர் நீதிமன்றம் உத்தரவில் உச்சநீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

Crackers
Crackers
author img

By

Published : Nov 13, 2020, 9:49 PM IST

தெலங்கானா மாநிலத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க அம்மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தெலங்கானா அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதில் பட்டாசுகள் வாங்கவோ, விற்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விற்பனையாளர்கள் பட்டாசுகள் விற்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளிக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

இதற்கிடையே நவம்பர் 9ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பட்டாசுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளில் உச்சநீதிமன்றம் சில திருத்தங்களை வெளியிட்டுள்ளது. அதில்

1. காற்று மாசு அதிகமாக இருக்கு பட்சத்தில் பட்டாசுகளை வாங்குவதற்கு தடை.

2. காற்று மாசு கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் 2 மணி நேரம் (இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை) பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. அதிக காற்று மாசு உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளன.

4. தீபாவளி மட்டுமின்றி கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய விழாக்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வரும் காரணத்தால் டெல்லி, கர்நாடகா, சண்டிகர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.