ETV Bharat / bharat

இனப்படுகொலை எப்படி நடத்தப்படுகிறது? - டெரக் ஓ பிரையன் விளக்கம் - இனப்படுகொலை எப்படி நடத்தப்படுகிறது

டெல்லி: வன்முறையை தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்ட பிறகே இனப்படுகொலை நடத்தப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Derek
Derek
author img

By

Published : Mar 12, 2020, 10:32 PM IST

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில், சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "

தேர்தலில் வெற்றி பெற கலவரத்தை தூண்டுவார்களா என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் மட்டுமே வாழ்க்கை கிடையாது. கலவரங்களால் பயனடைவது ஒரே கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு ஆதாரங்களும் உள்ளது. கலவரம் நடைபெற்ற பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சொன்னதை குறிப்பிட விரும்புகிறேன்.

டெரக் ஓ பிரையன்

மக்கள் படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் இது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது தெரியவருகிறது. இதனை நான் கண்டிக்கிறேன் என மம்தா தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நேரடியாக காஸ் சாம்பர்களில் அடைக்கப்பட்டு கொல்வது இல்லை. அது ஒரு செயல்முறை. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1905ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகின் முதல் இனப்படுகொலைக்கு முன்பும் இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு முன்பும் வன்முறையை தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதன் பிறகே இனப்படுகொலை நடத்தப்பட்டது.

மேற்குவங்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பினால் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், டெல்லியில் இதுவரை 9 பேரை மட்டுமே காவல் துறை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கை நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி செய்திருந்தால், இங்கிருந்து இருவர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பீம் ஆர்மிக்கு உதவும் பகுஜன் சமாஜ் கட்சியினர் - க்ளைமாக்ஸை எட்டிய மாயாவதி அரசியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.