ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் நரேஷ் கோயல். இவர் அந்நிறுவனத்தின் நிதியை மடைமாற்றியதாகவும், அந்நிய செலாவணிச் சட்டத்தை மீறியதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கோயலின் 19 தனியார் நிறுவனங்களில் 14 இந்தியாவிலும், 5 வெளிநாட்டிலும் இயங்கி வருகிறது.
இதேபோல் டெக்கான் கிரானிக்கல் நிறுவனத் தலைவரான வெங்கட்ரங்கம் ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் இரண்டு கார்கள், ரூ. 5 லட்சம் பணம், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இந்தச் சோதனை மேலும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.