ETV Bharat / bharat

இந்தியாவின் மருமகள் உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக மாறிய கதை...! - congress

இத்தாலியின் சிறு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் மருமகளாகி உலகின் மிகச் சக்திவாய்ந்த பெண்மணியாக மாறிய சோனியா காந்தியின் அரசியல் பயணம் குறித்த சிறு தொகுப்பு.

சோனியா
author img

By

Published : Aug 11, 2019, 10:30 AM IST

குடும்பத்திற்கு பாரத்தை ஏற்படுத்த விரும்பாத சோனியா:

இத்தாலி நாட்டில் லூசியானா என்னும் சிறு கிராமத்தில் வாழ்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்டெஃபனோ என்பவரின் இரண்டாவது மகள்தான் உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக உருபெறப்போகிறார் என்று அப்போது யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். அவர்தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெடுங்காலத் தலைவராக (1998-2017) இருந்த சோனியா காந்தி.

பள்ளிக் கல்வியை இத்தாலியில் முடித்துவிட்டு, ஆங்கிலம் கற்க ஆசைப்பட்ட சோனியா காந்தி 1964ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பெல் அறக்கட்டளை மொழிப்பள்ளியில் சேர்ந்தார். தன் ஏழைக் குடும்பத்திற்கு பாரத்தை ஏற்படுத்த விரும்பாமல், தன்னுடைய செலவுக்காக லண்டனில் ஒரு கிரேக்க உணவகத்தில் பகுதிநேர பணியாளராக பணியாற்றினார்.

ராஜிவ்- சோனியா காதலுக்கு இந்திரா காந்தி போட்ட கட்டளை:

1965ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேர்வதற்குப் பதிவு செய்தார். அந்தக் கல்லூரியில்தான் ராஜிவ் காந்தி மெக்கானிக்கல் பொறியியல் மாணவனாகப் படித்துவந்தார். இந்தச் சூழலில், சோனியா வேலை செய்த கிரேக்க உணவகமே ராஜிவ்-சோனியாவின் காதலுக்கு பிள்ளையார் சுழிபோட்டது.

ராஜிவ் காந்தி-சோனியா காந்தி
ராஜிவ் காந்தி-சோனியா காந்தி

தன் காதல் பற்றி தன் தாயிடம் ராஜிவ் சொன்னபோது, முதலில் புருவத்தை உயர்த்திய இந்திரா காந்தி பின்னர் மகனின் காதலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஆனால், சோனியாவை இந்தியாவிற்கு வந்து கலாசாரம், குடும்ப பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொண்ட பின் திருமண முடிவை எடுக்குமாறு ராஜிவுக்கு இந்திரா காந்தி அன்பு கட்டளை விதித்தார்.

ராஜிவ்-சோனியா திருமணம்
ராஜிவ்-சோனியா திருமணம்

அதன்படி, 1968இல் இந்தியா வந்த சோனியா நேருவின் குடும்ப பழக்கவழக்கங்களை அறிந்து கொண்டு இன்முகத்தோடு பின்பற்றத் தொடங்கியுள்ளார். சோனியாவின் இந்தச் செயலை கண்டு இந்திரா காந்தி இரண்டே வாரங்களில் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சோனியாவுக்கும் ராஜிவ்வுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

குழந்தைகளாக உள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
குழந்தைகளாக உள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

தனிமையில் வாடிய சோனியா... கற்றுக் கொடுத்த அத்தையின் செயலாளர்!

திருமணத்திற்குப் பின், விமான பைலட்டான ராஜிவ் காந்தியால் சோனியாவுடன் அதிக நேரம் செலவளிக்க முடியவில்லை. இதனால், தனிமையிலேயே இருந்த சோனியா, இந்திரா காந்தியின் தனிச்செயலாளர் உஷா பகத்திடம் அவரின் பிரதமர் பணிகள் குறித்துக் கேட்டறிவதில் அதீத ஆர்வம் காட்டினார். இதன்மூலம், ராஜிவ் காந்தியை விட சோனியாவுக்கு பிரதமர் அலுவலக செயல்பாடுகள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. இதற்கிடையே, சோனியா இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய இந்திரா காந்தி அவருக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்தார்.

சோனியாவின் ’மம்மி’ படுகொலை:

திருமணமான ஒன்றரை வருடத்திற்குள் ராகுலும் பிரியங்காவும் பிறந்தனர். இதையடுத்து, இந்திரா காந்தியுடன் மிகவும் நெருக்கமாகிய சோனியா தன் அத்தையை செல்லமாக ‘மம்மி’ என்றே அழைத்து வந்துள்ளார். மகிழ்ச்சிகரமான குடும்பப் பெண்ணாக வாழ்ந்த சோனியாவின் தலையில் முதல் பேரிடி விழுந்தது. ஆம், பாரத தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31ஆம் தேதி சொந்த பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது, இந்திரா காந்தியை தனது மடியில் கிடத்தி 'மம்மி... மம்மி' என்று கதறி அழுதது அவரது வாழ்வில் ஒரு மறக்க முடியாத தருணமாகும்.

இந்திராகாந்தி நினைவுநாளில் மலர் தூவும் சோனியா காந்தி

பிரதமரான ராஜிவுக்கு உதவிய சோனியா!

இந்திரா காந்தி உயிரிழந்த சிறிது நேரத்திலேயே, அவருடைய மகன் ராஜிவ் காந்திதான் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என செய்திகள் பரவின. ஏனெனில், தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த சஞ்சய் காந்தி 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்தபின், ராஜிவ் காந்தியை அரசியலில் ஈடுபடுத்தும் நோக்கில் சஞ்சய் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் நிறுத்தியதன் மூலம் வெற்றிபெற்றார். ராஜிவ் காந்தி அரசியலில் ஈடுபடுவது சோனியாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தன் அத்தை, கணவரின் முடிவை மதித்து ராஜிவுக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்தார். இந்திரா காந்தி இறப்பின்போது, காங்கிரசின் ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிய மூன்று மாதங்களே இருந்ததால், ஆட்சியைக் கலைத்து, மீண்டும் தேர்தலைச் சந்தித்தார் ராஜிவ் காந்தி.

சஞ்சய் காந்தி-இந்திரா காந்தி-ராஜிவ் காந்தி

அந்தத் தேர்தலில், தான் ஏற்கனவே நின்று வென்ற அமேதி தொகுதியில் மீண்டும் ராஜிவ் போட்டியிட்டார். ஆனால், ராஜிவுக்கு எதிராக அவரின் சகோதரர் சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் சோனியா ராஜிவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். 1984ஆம் ஆண்டு ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 543 தொகுதிகளில் 404 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. பிரதமரான ராஜிவ் காந்திக்கு, சோனியா காந்தி பெரிதும் உறுதுணையாக இருந்தார். அதற்கு, சோனியா இந்திரா காந்தியின் தனிச்செயலாளர் உஷா பகத்திடம் பிரதமரின் செயல்பாடுகள் குறித்துக் கற்றுக்கொண்டதும் முக்கியக் காரணமாக இருந்தது.

கலை மற்றும் வரலாற்றில் ஆர்வம் காட்டிய சோனியா:

கணவர் பிரதமராகிய பின், இந்திய நிலவியல் சார்ந்த ஆய்விலும் ஓவியத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சோனியா. இந்தக் காலகட்டத்தில்தான் நேரு, இந்திரா காந்திக்கு எழுதிய முக்கிய கடிதங்களைத் தொகுத்து ”டூ அலோன் டூ டுகெதர்” (two alone two together) என்ற புத்தகத்தை வெளியிட்டார் சோனியா.

நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு
நேரு - இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு

சோனியாவுக்கு விழுந்த அடுத்த பேரிடி:

இந்திரா காந்தி இறப்பிற்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பிய சோனியாவை மீண்டும் தாக்கியது அந்த குண்டுவெடிப்புச் சம்பவம். 1991 மே 21ஆம் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி உயிரிழந்தார். எந்த இருவரை நம்பி சோனியா இந்தியாவிற்கு வந்தாரோ அவர்களிருவரையுமே பறிகொடுத்து அநாதையாகினார் சோனியா காந்தி. மீள முடியாத சோகத்திலிருந்த சோனியா அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.

ராகுல் காந்தி-சோனியா காந்தி-பிரியங்கா காந்தி

சோனியா காந்தி வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய அமேதி தொகுதி மக்கள்:

ராஜிவ் காந்தி இறப்பிற்குப் பின், காங்கிரசின் தலைமைப் பொறுப்பை சோனியா ஏற்றுக்கொள்ள, அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும, சோனியாவுக்கு ஆதரவு சொல்ல வந்த அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் அவரை அரசியலுக்கு அழைத்தனர். ஆனால், சோனியாவோ அதை ஏற்காமல் தனக்கு மிகப்பிடித்த ஓவியத் துறையிலே ஆர்வம் காட்டினார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அந்தச் சமயம், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த நரசிம்ம ராவின் செயல்பாடுகள் கட்சியினரிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், 1993ஆம் ஆண்டு தன் கணவர் வெற்றிபெற்றிருந்த அமேதி தொகுதிக்குச் சென்றார் சோனியா. அங்குள்ள மக்கள் சோனியா காந்திக்கு உற்சாக வரவேற்பளித்ததைக் கண்டும் காங்கிரஸ் கட்சி மீது அம்மக்கள் கொண்ட அன்பை பார்த்தும் கலங்கினார். அதன்பின், இந்தியாவின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சோனியா காந்தி சந்தித்தார்.

காங்கிரஸ் தலைமையின் நிலையின்மையும் சோனியா காந்தியின் அரசியல் தொடக்கமும்:

ராஜிவ் மரணத்திற்குப் பின் காங்கிரஸ் கட்சி சரியான தலைமை இல்லாமல் தவித்துவந்தது. மெதுவாகக் காங்கிரஸ் தன் பலத்தை இழந்துகொண்டே வந்தது. 1996ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு அப்போதைய தலைவர் சீதாராம் கேசரியின் செயல்பாடுதான் காரணம் என்று கூறி, ப. சிதம்பரம், மம்தா பானர்ஜி, அர்ஜுன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தனர். இதனால், 100 ஆண்டு புகழ்கொண்ட காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாக ஊடகங்கள் கூறின.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்தச் சூழலில், நேரு குடும்பத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த சோனியா காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வதாக 1997ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார் சோனியா காந்தி. அடிப்படை உறுப்பினரான 62 நாட்களிலே காங்கிரசின் உச்சபட்ச பதவியான தலைவர் பதவியையும் முகர்ந்தார்.

சோனியா காந்தியால் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்:

சோனியா காந்தியைப் பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சியினர் தலைவராக ஏற்றுக் கொண்டாலும், சிலர் இத்தாலி நாட்டவரான சோனியாவை தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால், சோனியா தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தார். ஆனால், மூத்தத் தலைவர்கள் அதை ஏற்காமல், அதற்கு மாறாக எதிர்த்தவர்களை கட்சியைவிட்டு நீக்கினர். நீக்கப்பட்ட சரத் பவார், சங்மா, தாரிக் அன்வர் உள்ளிட்டோர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர்.

சோனியா காந்திக்கு மறைமுகமாக உதவிய ஜெயலலிதா...!

1998ஆம் ஆண்டு மத்தியில் பாஜக கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைத்தது. அப்போது அதிமுக 30 நாடாளுமன்ற இடங்களைப் பெற்று பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருந்தது. இந்தச் சூழலில், தனக்குச் சாதகமான அரசியல் சார்ந்த முடிவுகளை வாஜ்பாய் அரசு ஏற்கமறுத்ததால் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றார்.

ஜெயலலிதாவுடன் சோனியா காந்தி
ஜெயலலிதாவுடன் சோனியா காந்தி

இதனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மத்தியில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து, மீண்டும் 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில், சோனியா காந்தி அமேதி, பெல்லாரி தொகுதிகளில் களமிறங்கி வெற்றிபெற்றார். பெல்லாரி தொகுதியில் அனுபவமிக்க பாஜக பெண் தலைவர் சுஷ்மா ஸ்வராஜையே தோற்கடித்தார் சோனியா காந்தி. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்காவிட்டாலும், 114 தொகுதிகளில் வென்றதால் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராகி தன் எதிர்ப்புக் குரலை வலிமையாக முன்னிறுத்தினார்.

2004ஆம் ஆண்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளைத் தூள் தூளாக்கிய சோனியா காந்தி:

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், கார்கில்போர் வெற்றியால் மீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் அமரும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று எண்ணி ஒரே மாதத்தில் நாடு முழுவதும் மாபெரும் பரப்புரை மேற்கொண்டார்.

அந்தப் பரப்புரையின் பலனாக, அனைத்து அரசியல் கருத்துக் கணிப்புகளையும் தூள்தூளாக்கி பாஜகவை படுதோல்வியடையச் செய்தார் சோனியா காந்தி.

வாஜ்பாய்-சோனியா காந்தி
வாஜ்பாய்-சோனியா காந்தி

இதையடுத்து, சோனியாவே இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 'இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவின்படி சோனியாவை பிரதமராக்கக் கூடாது' என்று வந்த பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவர் பிரதமராக எந்தக் தடையும் இல்லை எனக் கூறியது.

'என் மனக்குரல் கேட்டே முடிவெடுப்பேன்' - சோனியா காந்தி

இதற்கிடையே, சோனியா 15 கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராகத் தடையேதும் இல்லை என்று அறிவித்தபோதிலும், காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்று சோனியா பேசினார்.

அதில், “என் வாழ்வில் இப்படியொரு தருணம் ஏற்பட்டால் என் மனக்குரல் கேட்டு முடிவெடுப்பேன் என எண்ணியிருந்தேன். என் மனக்குரல் இப்போது பிரதமராக வேண்டாம் என்று கூறுகிறது” என்றார். அவரது கருத்துக்கு பல காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தும் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அப்துல் கலாமையே ஆச்சரியமடையச் செய்த சோனியா காந்தி

பரபரப்பான சூழலில், சோனியா காந்தி மன்மோகன் சிங்கை அழைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சோனியா காந்தி தன்னை பிரதமராக்கக் கோரிதான் வந்துள்ளார் என்று நினைத்து, அனைத்து கோப்புகளிலும் சோனியா காந்தியின் பெயரைச் சேர்க்கக் கூறியுள்ளார்.

அப்துல் கலாமுடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்
அப்துல் கலாமுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங்

ஆனால், சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்க முன்மொழிந்ததும் பெரும் ஆச்சரியமடைந்துள்ளார் அப்துல் கலாம். இந்த முடிவை அவர் எடுத்ததற்குக் காரணம், நீண்ட பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தன்னால் எந்த நெருக்கடியும் வரக்கூடாது என்பதாக கூறப்பட்டது. அதன்பின், மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றார்.

மீண்டும் அது நடந்துவிடக் கூடாது என்பதற்காக சோனியா எடுத்த முடிவு:

ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப்பின் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட 'தலைமைத் தகராறு' மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று எண்ணிய சோனியா காந்தி, தன் மகன் ராகுல் காந்தியைத் தலைவராக்கும் முதல் படியாக 2004, 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.

சோனியா காந்தி-ராகுல் காந்தி
சோனியா காந்தி-ராகுல் காந்தி

உலகின் மிகச் சக்திவாய்ந்த பெண்மணி:

தனி ஒரு பெண்ணாக நின்று போராடி காங்கிரஸ் கட்சியை அழிவிலிருந்து மீட்டெடுத்த சோனியா காந்தியின் பெயர் 2004ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க இதழான போர்ப்ஸ்-இல் உலகின் மிகச் சக்திவாய்ந்த பெண்மணி பட்டியலில் மூன்றாவது இடத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், சோனியா காந்தியை 2010ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழில் வெளியான கிரகத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒன்பதாவது நபராக மதிப்பிட்டது.

போர்ப்ஸ் இதழ்
போர்ப்ஸ் இதழ்

மீண்டும் பாஜக கனவை நொறுக்கிய சோனியா காந்தி

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்தது காங்கிரஸ் கட்சி. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகின.

இந்நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பு போன்ற நலத்திட்டங்களைச் செய்த மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 2009ஆம் ஆண்டில் 206 இடங்களைப் பிடித்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். இதன்மூலம், ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்திலிருந்த பாஜகவின் கனவை தவிடுபொடியாக்கினார் சோனியா காந்தி.

ஊழல் குற்றச்சாட்டால் சரிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி:

2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய ஆட்சியில் காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், இரண்டாம் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததின் விளைவாக, அத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. இதனைத் தொடர்ந்து, தீவிர அரசியலிலிருந்து விலகி ராகுல் காந்தியைக் கட்சியின் முகமாகக் காட்டினார் சோனியா.

மேலும், 2017ஆம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். தோல்விக்குப் பொறுப்பேற்று சமீபத்தில் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகினார்.

சோனியா காந்தி- ராகுல் காந்தி
சோனியா காந்தி- ராகுல் காந்தி

மீண்டும் தலைவரான சோனியா காந்தி

ராகுல் பதவி விலகியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் தலைவராகலாம் என்று நினைத்துவந்த நிலையில், சோனியா காந்தியை இடைக்கால தலைவராகக் கட்சியினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சோனியா காந்தியின் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!

Intro:Body:

sonia

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.