புதுச்சேரி மாநிலத்தில் சோலார் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு கட்டடங்களிலும் சூரிய மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மேற்கூரையில் சுமார் ரூ.11 லட்சம் செலவில் மின் சக்தி தகடுகளை அமைக்கும் பணியினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சக்தி மூலம் சுமார் நாளொன்றுக்கு 100 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்பு