கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் சிறையில் இருக்கின்றன. வைரஸிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி கைகளை சுத்தமாக கழுவுவதும், வீட்டைவிட்டு வெளியே சென்றால் மாஸ்க் அணிவதும், தகுந்த இடைவெளியை பின்பற்றுவது மட்டும்தான்.

எளிதில் வைரஸ் பரவும் என்பதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் குறும்படம், காணொலி மூலமாக ஏற்படுத்திவருகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலம் தரம்பூர் பகுதியைச் சேர்ந்த குணால் பாய் பாண்ட்யா என்பவர் கிராம வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், தனது ஆறு மாத பெண் குழந்தை ஹெட்வி (Hetvi) மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், சானிடைசர், மாஸ்க், கையுறைகள் போன்றவற்றை அணிவதன் அவசியத்தை புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரசவமான பெண்ணுக்கு கரோனா தொற்று! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி