மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தளக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்துவருகின்றன.
டெல்லியில் ஆறாவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் தொடர் பேராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஆணவப்போக்கை கைவிட்டு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து தொலைகாட்சிகளுக்குப் பேட்டியளித்துவருகின்றனர். விவசாயிகளின் கடின உழைப்பால் அவர்களுக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம். அவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசுவதால் பயன் எதுவும் இல்லை. அவர்களுக்கான நிதியையும் உரிமையையும் வழங்கினால் மட்டுமே அந்தக் கடனை நம்மால் அடைக்க முடியும்.
-
अन्नदाता सड़कों-मैदानों में धरना दे रहे हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
और
‘झूठ’ टीवी पर भाषण!
किसान की मेहनत का हम सब पर क़र्ज़ है।
ये क़र्ज़ उन्हें न्याय और हक़ देकर ही उतरेगा, न कि उन्हें दुत्कार कर, लाठियाँ मारकर और आंसू गैस चलाकर।
जागिए, अहंकार की कुर्सी से उतरकर सोचिए और किसान का अधिकार दीजिए।
">अन्नदाता सड़कों-मैदानों में धरना दे रहे हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) December 1, 2020
और
‘झूठ’ टीवी पर भाषण!
किसान की मेहनत का हम सब पर क़र्ज़ है।
ये क़र्ज़ उन्हें न्याय और हक़ देकर ही उतरेगा, न कि उन्हें दुत्कार कर, लाठियाँ मारकर और आंसू गैस चलाकर।
जागिए, अहंकार की कुर्सी से उतरकर सोचिए और किसान का अधिकार दीजिए।अन्नदाता सड़कों-मैदानों में धरना दे रहे हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) December 1, 2020
और
‘झूठ’ टीवी पर भाषण!
किसान की मेहनत का हम सब पर क़र्ज़ है।
ये क़र्ज़ उन्हें न्याय और हक़ देकर ही उतरेगा, न कि उन्हें दुत्कार कर, लाठियाँ मारकर और आंसू गैस चलाकर।
जागिए, अहंकार की कुर्सी से उतरकर सोचिए और किसान का अधिकार दीजिए।
ஆணவம் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விழித்துக்கொண்டு விவசாயிகளுக்கான உரிமையைப் பெற்றுதர வேண்டும்" என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். ஆனால், அதனை விவசாயிகள் நிராகரித்தனர்.