ஆந்திர மாநிலம், பிரகாஸம் மாவட்டத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (20). இவர் ஓன்கோல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பயிலும் தன் சக மாணவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறிந்த அறிந்து கொண்ட தந்தை கிருஷ்ணா ரெட்டி, மகள் வைஷ்ணவியை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய இருப்பதை அறிந்த கிருஷ்ணா, வைஷ்ணவியை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அம்மாநில போலிஸ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா ரெட்டியை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ஒருவரை போலீஸார், சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.