ETV Bharat / bharat

மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் டேங்கர்... கொடுக்க மறுக்கும் அதிமுக எம்எல்ஏ!

புதுச்சேரி: மீனவர்கள் வலையில் சிக்கிக் கொண்டுவரப்பட்ட செயற்கைக்கோளின் எரிபொருள் டேங்கரில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் காணாமல் போயிருக்கிறது.

puducherry
puducherry
author img

By

Published : Dec 3, 2019, 3:27 PM IST

புதுச்சேரி வம்பகீரபாலயம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மிக கனமான பொருள் ஒன்று வலையில் சிக்கியதைத் தொடர்ந்து, அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டார் தான் இது என்பது தெரியவந்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி என எரிபொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ குழு இன்று புதுச்சேரிக்கு வந்து, அந்த பொருளை ஆய்வு செய்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் டேங்கர்

அப்போது, ஒரு அடி நீளமுள்ள பகுதியைக் காணவில்லை என இஸ்ரோ குழுவினர் கூறியதையடுத்து, மீனவர்கள் அதனை எடுத்திருந்தால் உடனே அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் அது வெடிக்கும் தன்மை கொண்டது எனவும் எச்சரித்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த எம்எல்ஏ அன்பழகன் மற்றும் மீனவர்கள், எரிபொருள் டேங்கரை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மீனவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் ராக்கெட் எரிபொருள் டேங்கரை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் அதிகாரிகளிடம் அவர்கள் வாதிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல்: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Intro: கடலில் மீனவர் வலையில் சிக்கிக் கொண்டு வரப்பட்ட செயற்கைக்கோளின் எரிபொருள் டேங்க்ரில் வெடிக்கும் தன்மை கொண்ட தன்மை கொண்ட பொருள் காணாமல் போயிருக்கிறது

Body:புதுச்சேரி வம்பகீரபலயம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மிக கனமான பொருளை வலையில் சிக்கியது தொடர்ந்து மற்றொரு படகுடன் இரும்பிலான ராக்கெட் உதிரி பாகத்தை இந்த பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் செயற்கை கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டார் இது என்பது தெரியவந்தது 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி என எரிபொருள் குறிப்பிடப்பட்டுள்ளது இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ குழு இன்று புதுச்சேரிக்கு வந்து கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிக் கொண்டு வரப்பட்ட செயற்கைக்கோளின் எரிபொருள் டேங்க் ஆய்வு செய்கின்றனர் எரிபொருள் தென்கரை அவர்கள் எடுத்துச் செல்கின்றனர் டேங்கரில் இருந்து வெடிக்கும் தன்மை கொண்ட எரிபொருள் நிரப்பிய பாகத்தை இஸ்ரோ குழுவினர் அகற்றினார்கள் இதில் ஒரு அடி நீளமுள்ள பகுதியை காணவில்லை மீனவர்கள் எடுத்து இருந்தால் உடனே அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர் வெடிக்கும் தன்மை கொண்டது என எச்சரித்துள்ளனர்

இதனுடைய சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் மீனவர்கள் எரிபொருள் டேங்க் வரை அவர்கள் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர் மீனவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் ராக்கெட் எரிபொருள் டேன்கரை எடுத்து செல்லக்கூடாது என அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர்

பெட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

Conclusion:கடலில் மீனவர் வலையில் சிக்கிக் கொண்டு வரப்பட்ட செயற்கைக்கோளின் எரிபொருள் டேங்க்ரில் வெடிக்கும் தன்மை கொண்ட தன்மை கொண்ட பொருள் காணாமல் போயிருக்கிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.