ETV Bharat / bharat

'இந்தியா இல்லாமல் ஆர்.சி.இ.பி. ஒரு வலுவிழந்த அமைப்பு' - வர்கீஸ் தற்போதைய பேட்டி

'இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களைப் பொறுத்து நாம் பார்த்தால், ஒரு கட்டத்தில் வெளியே இருப்பதைவிட இந்த ஒப்பந்தத்திற்குள் வருவது சிறந்தது என்றே நான் கருதுகிறேன். ஆகவே, எதிர்காலத்தில் விரைவில், RCEP -க்குள் இந்தியாவையும் பார்க்க முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்' என்றார் வர்கீஸ்.

RCE
author img

By

Published : Nov 13, 2019, 2:07 PM IST

RCEP (பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு)இல் கையெழுத்திடுவது பிராந்தியத்தின் நலனுக்காகவும் இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களுக்காகவும் இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் உயர்மட்ட தூதர் பீட்டர் வர்கீஸ் இன்று வாதிட்டார்.

டி.எஃப்.ஏ.டி. DFAT (வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை) முன்னாள் செயலாளரும் இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையருமான வர்கீஸ் ஆஸ்திரேலிய அரசின் இந்தியப் பொருளாதார ஆராய்ச்சி கட்டுரையை ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க இன்று சி.ஐ.ஐ. நடத்திய கருத்தரங்கில், இந்தியா எதிர்காலத்தில் RCEP இல் சேரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வர்கீஸ்.

"இந்த நேரத்தில் சர்வதேச பொருளாதாரத்தையும் வர்த்தக தாராளமயமாக்கல் தற்போது எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் பார்க்கும்போது உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி, உலக மக்கள்தொகை தலா மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு உடன்படிக்கை என்பது முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களைப் பொறுத்து நாம் பார்த்தால், ஒரு கட்டத்தில் வெளியே இருப்பதைவிட இந்த ஒப்பந்தத்திற்குள் வருவது சிறந்தது என்றே நான் கருதுகிறேன். ஆகவே, எதிர்காலத்தில் விரைவில், ஆர்.சி.இ.பி.க்குள் இந்தியாவையும் பார்க்க முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்” என்றார் வர்கீஸ்.

இந்தியா பல நாடுகளுடன் மேற்கொள்ளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து கேள்விக்கு, வர்த்தக தாராளமயமாக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வெவ்வேறு இலக்குகள் இருக்கும். இதில் இந்தியாவின் இலக்குகள் குறைவாகவே உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இது பொருளாதாரத்திற்கு ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும்.

RCEP
இருநாட்டி பிரதமர்கள் சந்திப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளுடனும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டின்போது முன்மொழியப்பட்ட RCEP ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.

"RCEP பேச்சுவார்த்தை நடைபெற்ற ஏழு ஆண்டில், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலைகள் உள்பட பல விஷயங்கள் மாறிவிட்டன. இந்த மாற்றங்களை நம்மால் கவனிக்க முடியாது. RCEP ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம் RCEP இன் அடிப்படைகளையும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டும் கொள்கைகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.

இது இந்தியாவின் தற்போதைய பிரச்னைகளையும் சிக்கல்களையும் திருப்திகரமாக நிவர்த்தி செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவால் RCEP ஒப்பந்தத்தில் சேர முடியாது” என்று தாய்லாந்தில் பிரதமர் மோடி RCEPஇல் இருந்து விலகுவதற்கான முடிவை அறிவித்தார்.

RCEP-யை விட்டு இந்தியா வெளியேறியது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான FTA தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுக்குக் கடினமான ஒன்றாக மாற்றுமா கேட்டதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் (பொருளாதாரப் பிரிவு) பி. ஹரிஷ், RCEP க்கு ஒப்புக்கொண்ட 15 உறுப்பு நாடுகளுடனும் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருக்கும் அதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவுக்கு வர்த்தக உபரி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

RCEP
இந்தியா - ஆஸ்திரேலியா 1

2035ஆம் ஆண்டின்போது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம், வியாபாரம், முதலீட்டு கூட்டுறவு ஆகியவற்றை முக்கியமான ஒன்றாக மாற்றுவதற்கான ஒரு திட்டமாகவே 'இந்திய பொருளாதார யுக்தி' (India Economy Strategy) உள்ளது. வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிகளை இந்தியச் சந்தையில் அதிகரிப்பதற்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறினார்.

இதற்கிடையில், பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்திக்கும்போது, அதை நீக்க துறைவாரியாக மத்திய அரசு கவனமாக செயலாற்றிவருகிறது. சமீபத்தில் உதிரி பாகங்கள் (ஆட்டோமொபைல்), மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது போல. சுற்றுலா, வணிகத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நேரடி இணைப்பு இருக்க வேண்டிய அவசியத்தையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இருதரப்பு பொருளாதார உறவை உயர்த்துவதற்கான முக்கிய துறைகளாக எரிசக்தி, ஃபின்டெக், அனிமேஷன் கேமிங், வங்கித் துறை, மருத்துவ தொழில்நுட்பம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

RCEP லிருந்து இந்தியா விலகுவது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா ஆஸ்திரேலிய முன்னாள் வெளியுறவு செயலர் பீட்டர் வர்கீஸுடன் கலந்துரையாடினார். அதில்,

RCEP
இந்தியா - ஆஸ்திரேலியா 2

கேள்வி: இந்தியப் பொருளாதார வியூக அறிக்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எவை?

பதில்: அரசு பரிந்துரைகளை ஆராய்ந்து, முறையான அணுகுமுறையை எடுத்துள்ளது. நமது செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை இப்போது எங்களிடம் உள்ளது.

கேள்வி: RCEP லிருந்து இந்தியா வெளியேறுவதன் மூலம் உலகிற்குச் சொல்லும் செய்தி என்ன?

பதில்: RCEP ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுடன் ஒரு வலுவான ஒப்பந்தமாக இருந்திருக்கும். எங்களுடன் சேருவதைத் திட்டவட்டமாக நிராகரிப்பதுதான் இந்தியாவின் நிலை என்று நான் கருதவில்லை. எனவே இந்த கதவைத் திறந்தே வைத்துள்ளோம், இந்தியா ஒரு கட்டத்தில் எங்களுடன் வரும் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய வர்த்தக தாராளமயமாக்கல் கொள்கையில் இந்தியா இருப்பது, இந்த பிராந்தியத்தின் நலனுக்காகவே என்று நான் கருதுகிறேன். மேலும், இது பிராந்தியத்தில் பெரிய வர்த்தக தாராளமயமாக்கலில் ஒரு பகுதியாக இருப்பது இந்தியாவின் நீண்டகால திட்டமாகவுள்ளது.

கேள்வி: இந்தியச் சந்தை மலிவான சீனப் பொருள்களால் நிரம்பியுள்ளது. இந்தச் சூழலில் ஆசிய நாடுகளுடனான தாராளமய வர்த்தக ஒப்பந்தங்கள்தான் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தன என்று அரசு வாதிடுகிறது. இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: இவை பற்றியெல்லாம் இந்தியாவால் மட்டுமே முடிவெடுக்க முடியும். வர்த்தக தாராளமயமாக்கலுக்கு எதிராக உள்நாட்டில் உருவாகும் எதிர்ப்புகளை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். அனைவரது நன்மைகள் குறித்து ஆராய்ந்த பின் முடிவுகளை எடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய தாராளமய வர்த்தக ஒப்பந்தங்களில் சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. சீனா, ஜப்பான், பிற நாடுகளிடம் ஆஸ்திரேலியா செய்துள்ள ஒப்பந்தங்களைப் பார்த்தால், அது இரு நாடுகளும் பயனடையும் வகையிலேயே உள்ளது. அதேபோல இரு தரப்பினரும் பயனடையக்கூடிய வகையில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

கேள்வி: சீனாவின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாறும் என்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா?

பதில்: இந்தியாவின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இறுதியில் முடிவை நீங்கள்தான் (இந்தியா) எடுக்க வேண்டும். ஒருவர் அனைத்து துறைகளிலும் முன்னேறியவராக இருப்பதில்லை. ஆனால் இது தொடர்பான முடிவுகளையெல்லாம் அரசுதான் எடுக்க முடியும்.

கேள்வி: இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் CECA (விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்) முடிவடையும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: RCEP பற்றி ஆராய CECA ஒப்பந்தம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போது RCEPஇல் ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டதால், அடுத்த செய்யக்கூடிய செயல்களைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும். CECAஇன் முடிவை பொறுத்ததில்லாமல் வர்த்தகம், முதலீட்டை விரிவுபடுத்துவதற்கும் செய்யவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. CECA மற்றும் RCEP மட்டுமே இவ்விரு நாடுளின் எதிர்காலம் உள்ளது என்று கருத முடியாது.

கேள்வி: இந்தியா சேரவில்லை என்றால் RCEP பலமிழந்து போகுமா?

பதில்: இந்தியா இல்லாமல் RCEP பலவீனமாக இருக்கும். இந்தியா இதில் இணைந்திருந்தால் RCEP வலுவான ஒப்பந்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு, இந்தியா RCEP இல் பங்கேற்க உதவும் வகையில் அதற்கான கதவைத் திறந்துவைத்திருப்பது முக்கியம். இந்த நேரத்தில் சர்வதேச பொருளாதாரத்தையும் வர்த்தக தாராளமயமாக்கல் தற்போது எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் பார்க்கும்போது உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி, உலக மக்கள்தொகை தலா மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு உடன்படிக்கை என்பது முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களைப் பொறுத்து நாம் பார்த்தால், ஒரு கட்டத்தில் வெளியே இருப்பதைவிட இந்த ஒப்பந்தத்திற்குள் வருவது சிறந்தது என்றே நான் கருதுகிறேன். ஆகவே, எதிர்காலத்தில் விரைவில், ஆர்.சி.இ.பி.க்குள் இந்தியாவையும் பார்க்க முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

Intro:Body:

RCEP  - without india RCEP is powerless 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.