கர்நாடக மாநிலம் மைசூருவின் ராமானுஜ சாலையில் உள்ள ஒரு வீட்டின் கிரில் கதவில் பறக்கும் பாம்பு ஒன்று தொற்றிக்கொண்டிருந்தது.
பொன் நிறத்தில் இருந்த இந்தப் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வீட்டார், பாம்பு பிடிப்பவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்.
ஆனால், அவர் சம்பவ இடத்துக்கு வருவதற்கும் முன்பே அந்த அரியவகை பாம்பு அங்கிருந்து மாயமானது.
கிரிசோபெலியா ஆர்னேட் (Chrysopelea ornata) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வகைப் பாம்புகள் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலை, பிகார், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு இந்தியா, தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிகம் காணப்படுகின்றன.
தனது உடலை நெளித்தவாறு இந்த வகைப் பாம்புகள் மரம் விட்டு மரம் தாவக்கூடிய திறன் படைத்தவை.
இதையும் படிங்க : கட்டுக்குள் வெட்டுக்கிளி தாக்குதல் - ராஜஸ்தான் அரசு