பொதுவாக நம் வீட்டின் அருகே தண்ணி போட்டுவிட்டு 'வேணாம் பிலிப்ஸ்சு' என்று ஆடி பார்த்திருப்போம். ஆனால், குஜராத் மாநிலம் ராஜ்கோட் சேர்ந்த இவர் சற்று வித்தியாசமாக தண்ணி போடாமல் தண்ணீருக்குள் அட்டகாசமாக ஆடுகிறார்.
நடனத்தில் ஜாஸ், ஹிப் ஹாப் எனப் பல வகை நடனங்கள் உண்டு. இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவதைப் போல தண்ணீருக்குள் அமர்க்களமாய் ஆடுகிறார் இந்த ஜெய்தீப் கோயல். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் இவரது ஆட்டம் பலரைக் கவர்ந்துள்ளது.
கேரம் போர்ட், செஸ் வைத்திருப்பதைப் போல இவர் இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி தொட்டியை வைத்துள்ளார். இதற்காகவே சிறு வயதிலிருந்தே கடினமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா காட் டேலண்ட் நிகழ்ச்சியில் அக்ஷ்ய் குமாருடன் நடனமாடி கவனத்தை ஈர்த்தவர்.
நடனத்தையும் நீச்சலையும் இணைத்த இவரது வித்தியாசமான பாணி பார்ப்போரை பிரம்மிக்கச் செய்கிறது என்றால் மிகையில்லை.