மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அண்டை நாடுகளிலிருந்து வரும் மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இருப்பினும் இச்சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராடிவருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலட் தலைமயிலான காங்கிரஸ் அரசு, சட்டப்பிரிவு 131-ஐ பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ராஜஸ்தான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,"குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது. எனவே, இச்சட்டத்தை செல்லாததாக அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளா அரசு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வழக்குகளுக்கு இவ்வளவு கோடியா? - பாதுகாப்பு துறையின் ரிப்போர்ட்!