இதுகுறித்து இந்தியன் ரயில்வே அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்று என அறிவிக்கப்பட்ட கோவிட் 19 பரவலால் நமது தேசம் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இது ஒரு எதிர்பாராத மோசமான பேரழிவு ஆகும். இந்த சூழலில் நாம் அரசாங்கத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக நமது ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும். அடிப்படை ஊதியம் குறைவாக உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.