காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, சமையல் கியாஸ் விலை உயர்வுக்காக பாஜக மகளிரணி நடத்திய போராட்ட புகைப்படம் அது. அதில் ஸ்மிருதி இரானியும் உள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பற்றி, ராகுல் காந்தி கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், 'சமையல் கியாஸ் விலை தற்போது ரூ.144.50 காசுகள் உயர்ந்துள்ளது. எப்போது போராடப் போகிறீர்கள்' எனவும் ராகுல் கேள்வியெழுப்புள்ளார்.
-
I agree with these members of the BJP as they protest the astronomical 150 Rs price hike in LPG cylinders. #RollBackHike pic.twitter.com/YiwpjPdTNX
— Rahul Gandhi (@RahulGandhi) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I agree with these members of the BJP as they protest the astronomical 150 Rs price hike in LPG cylinders. #RollBackHike pic.twitter.com/YiwpjPdTNX
— Rahul Gandhi (@RahulGandhi) February 13, 2020I agree with these members of the BJP as they protest the astronomical 150 Rs price hike in LPG cylinders. #RollBackHike pic.twitter.com/YiwpjPdTNX
— Rahul Gandhi (@RahulGandhi) February 13, 2020
இதையடுத்து ட்விட்டரில், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் (#RollBackHike) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நரேந்திர மோடி, 'இது சாதாரண மனிதர்களுக்கான பட்ஜெட்' என்று கூறினார். தற்போது சமையல் கியாஸ் விலை ரூ.144 உயர்ந்துள்ளது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மரத்தை உபயோகித்து மாயாஜாலம் - கின்னஸ் சாதனையில் மத்தியப் பிரதேச சிற்பி