பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாமை அக்கட்சி நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ், "பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எங்கு போனார்கள் என்பது கூட தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தேவை என்றபோது கவசம்போல் செயல்பட்டிருக்க வேண்டிய ராகுல் காந்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து வெளியேறியதுபோல், போர்களத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். மோடியை விமர்சித்தவர்கள் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர்" என்றார்.