ETV Bharat / bharat

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி வருத்தம்! - Rahul apology

டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தவறாக கூறியதற்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

Rahul apology for his comment against modi
author img

By

Published : Apr 22, 2019, 3:12 PM IST

Updated : Apr 22, 2019, 4:03 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், காவலாளி என சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என கூறியிருந்தார்.

இதனையடுத்து பாஜக எம்பியான மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை தனக்கு ஏற்றார் போல் திரித்து அரசியல் சாயம் பூசி, அதில் ஆதாயம் தேடியுள்ளார் என ராகுல் காந்தி மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 15ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில், ரஃபேல் விவகாரத்தில் தங்களுடைய அரசு எந்தவித தவறும் செய்யவில்லை என கூறி வருகிறார். அதற்கு பதிலளித்துதான் பேசினேனே தவிர நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத வகையில் செயல்படுவது என் நோக்கம் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்

Conclusion:
Last Updated : Apr 22, 2019, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.