புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (70) கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இவர் உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக 1985-1990இல் இருந்தார். பின்னர் 2001-2006, 2006-2011 ஆகிய இரண்டு முறை முதலியார்பேட்டை தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
மேலும் 2012-2014 வரை திமுக அமைப்பாளராகவும், 2018ஆம் ஆண்டுமுதல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில அமைப்பாளராகப் பொறுப்பில் இருந்தார். இவரது தந்தை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.
புதுச்சேரி மநீம அமைப்பாளர் கரோனாவால் உயிரிழப்பு! - Puducherry Makkal Needhi Maiyam leader Subramaniyam
புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கரோனாவால் மருத்துவம் பலனின்றி இன்று உயிரிழந்தார்.