ETV Bharat / bharat

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி! - ADMK MLAs Walkout From Budget Session

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2ஆயிரத்து 42 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

puducherry-interim-budget-filed-by-cm-narayanasamy

author img

By

Published : Mar 30, 2020, 12:05 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், அதிமுக , திமுக உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டும் காரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி பங்கேற்கவில்லை.

சட்டப்பேரவையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. சட்டப்பேரவை தொடங்கியவுடன் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் பேசத்தொடங்கினார். அப்போது, கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏ அன்பழகன் அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து இறுதியாக வாய்ப்பு வழங்கப்படும் என கூறியதை ஏற்காமல், அதிமுக எம்எல்ஏ-க்கள் திடீரென சபாநாயகர் சிவக்கொழுந்து இருக்கையை முற்றுகையிட்டனர்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி

கரோனா வைரஸ் தொடர்பாக புதுச்சேரி அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், அசானா பாஸ்கர், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாத செலவினங்களுக்கான 2,042 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். பின்னர் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து' - நாரயணசாமி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.