புதுச்சேரி அரசு வனம் மற்றும் வனவிலங்கு துறையின் மூலம் ஊசுடு ஏரியின் கருத்து காட்சி விளக்க மையக் கட்டடம் வனத் துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி கருத்து காட்சி கட்டட மையத்தை திறந்துவைத்தார்.
மத்திய அரசின் 100 விழுக்காடு நிதி பங்களிப்புடன் 86 லட்சம் ரூபாய் செலவில் நீர்வாழ் சூழல் அமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஊசுடு ஏரி கருத்து விளக்க மையம் நாட்டில் முதன் முறையாக சிற்பம் மற்றும் ஓவியக்கலை அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து கலை வேலைப்பாடுகளும் நேர்த்தியான சிற்பம் மற்றும் ஓவிய கலைஞர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கட்டட நுழைவு வாயிலில் 12 வகையான நீர் மற்றும் நிலப்பரப்பு பறவைகள், கடப்பா கற்களில் வர்ணம் பூசப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் பறவைகள், விலங்கினங்களின் பெயர்களையும் தமிழ், ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - முதலமைச்சர் தொடங்கிவைப்பு